ஒரு வரலாற்றுச் சுருக்கம்
ஸ்டீஃபன் ஹாக்கிங்
Tamil Translation of - "A BRIEF HISTORY OF TIME"
தமிழாக்கம்: நலங்கிள்ளி
பதிப்பாசிரியர்: தியாகு
வெளியீடு:
உலகத் தமிழ் மொழி அறக்கட்டளை
சிகாகோ, அமெரிக்கா
ISBN: 0-9676-212-2-4
இந்த மே மாதம் சென்னை சென்றபோது வாங்கிவந்தேன். நான் வாங்கிய பிரதி இரண்டாம் பதிப்பாம் [2005]. பார்க்கவே சந்தோஷமாக இருக்கிறது. தமிழில் ஓர் பொது அறிவியல் நூல் வெளிவந்து அதுவும் சுஜாதாவின் புத்தகமாக அல்லாது இரண்டாம் பதிப்பெல்லாம் வருவது [மொழி பெயர்ப்பானாலும்] கண்டு மகிழ்ச்சியாக உள்ளது.
நான் இந்த புத்தகத்தை ஆங்கிலத்தில்கூட படித்ததே கிடையாது. நேரடியாக தமிழில் படிக்க ஆரம்பித்திருக்கிறேன். கனஜோராக இருக்கிறது.
இதன் மொழிபெயர்ப்பாளர் உரையிலிருந்து:
"... 1995 வரை ஏற்பட்டுள்ள நவீன அறிவியல் வளர்ச்சிகளும் இந்நூலில் இடம் பெற்றுள்ளுன. பல கலைச்சொற்களுக்கு இன்னும் தமிழாக்கம் வராத நிலை! எனவே ஒவ்வொரு சொல்லையும் தமிழாக்குவதற்கு முன் நீண்ட பெரும் விவாதம் செய்ய நேர்ந்தது. குறிப்பாக தந்திக் கோட்பாடு, காலப் பயனம் பற்றியெல்லாம் பேசும் நூல்கள் தமிழில் அரிது. எல்லாமே தமிழுக்கு புதிது!
அணுவின் அடிப்படைத் துகள்கள் பலவற்றுக்குத் தமிழ்ச் சொற்களே இதுவரை இல்லாத நிலையிலும், இந்நூலில் கிட்டதட்ட எல்லா அணுத் துகள்களுக்குமே தமிழில் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
குவாண்டம், என்ட்ராபி போன்றவை பழைய அறிவியல் செய்திகள் என்றாலும் இந்தச் சொற்களுக்கும் தமிழாக்கம் இல்லை. இவை போன்ற பல சொற்களையும் கூட தமிழாக்க முயற்சி செய்துள்ளோம்....."
இப்புத்தகத்தில் பயன்படுத்தியுள்ள கலைச்சொற்களையும் பட்டியலிட உத்தேசம். படித்து முடித்தபின் மதிப்புரையுடன் பதிவு செய்கிறேன்.