விடுதலை - சிட்டுக் குருவி
பல்லவி
விட்டு விடுதலை யாகிநிற் பாயிந்தச்
சிட்டுக் குருவியைப் போலே.
சிட்டுக் குருவியைப் போலே.
சரணங்கள்
எட்டுத் திசையும் பறந்து திரிகுவை
ஏறியக் காற்றில் விரைவொடு நீந்துவை
மட்டுப் படாதெங்கும் கொட்டிக் கிடக்குமிவ்
வானொளி யென்னும் மதுவின் சுவையுண்டு
பீடையி லாதோர் கூடு கட்டிக்கொண்டு
முட்டைதருங் குஞ்சைக் காத்து மகிழ்வெய்தி
முந்த வுணவு கொடுத்தன்பு செய்திங்கு
முன்கொண்ட தானியம் தன்னைக் கொணர்ந்துண்டு
மற்றப் பொழுது கதைசொல்லி தூங்கிப்பின்
வைகறை யாகுமுன் பாடி விழிப்புற்று
எட்டுத் திசையும் பறந்து திரிகுவை
ஏறியக் காற்றில் விரைவொடு நீந்துவை
மட்டுப் படாதெங்கும் கொட்டிக் கிடக்குமிவ்
வானொளி யென்னும் மதுவின் சுவையுண்டு
(விட்டு)
பெட்டையி னோடின்பம் பேசிக் களிப்புற்றுப்பீடையி லாதோர் கூடு கட்டிக்கொண்டு
முட்டைதருங் குஞ்சைக் காத்து மகிழ்வெய்தி
முந்த வுணவு கொடுத்தன்பு செய்திங்கு
(விட்டு)
முற்றத்தி லேயுங் கழனி வெளியிலும்முன்கொண்ட தானியம் தன்னைக் கொணர்ந்துண்டு
மற்றப் பொழுது கதைசொல்லி தூங்கிப்பின்
வைகறை யாகுமுன் பாடி விழிப்புற்று
(விட்டு)
- மகாகவி பாரதி
இங்கு வந்தபின் முதல் பனிக்காலத்தில் யாருமில்லாத ஒரு காலைப் பொழுதில், என் சித்தப்பா குடுத்த பித்துக்குளி முருகதாஸின் ஒலிநாடாவில் முதல்முறை இந்த பாடலைக் கேட்டேன். அதன் சிந்தனையும் எளிமையும் சட்டென்று என்னை கவர்ந்தது. உடனே முணுமுணுக்க தொடங்கிவிட்டேன். பின்புதான் தெரிய வந்தது இது பாரதியின் படைப்பென்று. மகாகவின்னா சும்மாவா?