March 26, 2006

ஹாலிவுட்டில் ரஹ்மான்?

நேற்று டென்சல் வாஷிங்கடன், ஜோடி ஃபாஸ்டர் மற்றும் க்ளைவ் ஓவன் நடித்த INSIDE MAN படம் பார்த்தேன். படம் ஆரம்பித்தவுடன் ஒரு இனிமையான அதிர்ச்சி! திடிர்னு தலைவர் ரஹ்மானோட தில்சே படத்தின் சைய்ய சைய்யா பாட்டு அலறுகிறது. ஆமாங்க என்னால நம்பவே முடியலை. படத்தோட ஆரம்பத்திலயும், முடிவுலயும் இரண்டு தடவையும் சைய்யா சைய்யா பாட்டு தான் பின்னனி இசை. கொஞ்சம் ரீமிக்ஸ் இருந்தது. ரஹ்மான் ஹாலிவுட்டில் பால் காய்ச்சியாச்சு. யாம் பெற்ற இன்பம் இவ்வுலகமும் பெறட்டும்! <விவரங்கள் இங்கே>
தலைவரோட சைய்யா சைய்யா பாட்டுதான் பாலிவுட்டில் ரஹ்மானின் அடையாளமாக விளங்குகிறது. முந்தாநாள் தான் "லார்ட் ஆப் தி ரிங்க்ஸ்" தலைவரோட இசையில் டொராண்டோல அரங்கேற்றம் பண்ணியாச்சு. ஆனா மந்தமான வரவேற்புதான் போல.
இன்சைட் மேன் படமும் நல்ல ஜோரா இருக்கு. வசனங்களும் ஆஹா ஓஹோ ரகம்தான். ஸ்பைக் லீ படம், வேற எதுவும் சொல்லலை, வேணும்னா இங்கு முன்னோட்டம் பாருங்க. படம் கண்டிப்பா பாருங்க.

March 20, 2006

V for வேண்டாண்டா!


Matrix Trilogy கொடுத்த வாகோஸ்கி சகோதரர்கள் எழுதி/தயாரித்த, அவர்களிடம் துனை இயக்குனராக பணியாற்றியவரே இயக்கியிருக்கும் படம் . வாகோஸ்கி சகோதரர்களின் புரட்சிகரமான சிந்தனைகளுடன் இன்னுமொரு படம் (?). கொட்டகையில் பார்த்தே ஆக வேண்டுமென்று வெறியில்லை என்றால் வட்டு வந்தவுடன் பாருங்கள் போதும்.

V for Vendetta

அதிகாரபூர்வ தளம்
IMDB'ல்

கதை: வாழையடி வாழையாக சொல்லப்படும் கொடுங்கோல் ஆட்சி நடத்துபவனுக்கு எதிராக தனிய்யொரு மனிதன் எழுப்பும் புரட்சிக்கதைதான். திரைக்கதையில் ஆங்காங்கே பளிச். தவிர கதை 2020'ல் நடப்பதால் வைரஸ் தாக்குதல், அரசின் 24*7 கண்கானிப்பு போன்ற சமாச்சாரங்கள் இருக்கின்றன. கனிசமான அளவு ரத்தம் வழிகிறது. புரட்சிக்கூவல் விடுக்கும் முகமூடி மனிதனாக ஹியூகோ வீவிங், எதேச்சையாக இந்த புரட்சிப்போரில் உள்ளிழுக்கப்படும் பதுமையாக நேடலி போர்ட்மென் என்று எல்லா பாத்திரங்களும் கச்சிதமாகப் பொருந்தி நடித்திருக்க்கிறார்கள். தேவையான அளவு கிராஃபிக்ஸ் ஜாலங்கள்.

படத்தின் முக்கிய குறையே புரட்சியின் பிறப்பை சித்தரிப்பதில்தான். எல்லா தேர்ந்த கலைஞர்களையும் எப்போதாவது ஒருமுறையேனும் சுண்டியிழுக்கும் இந்த கதைக்களம்தான் பிரச்சினையே. சமீபத்தில் ஆய்த எழுத்தில் மணிரத்தினமும் சமூகத்தில் புரட்சிக்கான பிரத்தியேக ஃபார்முலாவை சித்தரிக்க முயன்று சுட்டுக்கொண்டது நினைவில் இருக்கலாம். தற்போதைய இந்த படம் நன்றாக தொடங்கியபின் பின்பாதியில் முடிவை நோக்கியிட்டுச் செல்லும்போது தொய்ந்துவிடுகிறது. மக்களின் கவனத்தை பெற்ற பின்பு அரசின் எதிர்ப்பைத் தாண்டி எப்படி தன் பக்கம் இழுக்கிறான் கதாநாயகன் என்பது நம்பும்படியாக இல்லை. 2020'ல் நிலவும் தொழில்நுட்பத்தை சித்தரிப்பதில் நிரைய கோல் விட்டிருக்கிறார்கள், ஸ்பீல்பெர்க் இந்த விஷயத்தில் கெட்டி.
படத்தின் மூலம் காமிக்ஸ் புக் என்றாலும் நான் அந்த காமிக்ஸை படித்ததில்லை. ஆனால் அந்த காமிக்ஸை உருவாக்கிய ஆலன் மூர் இந்த படத்தை அங்கீகரிக்க மறுத்துவிட்டார். ஆகையால் 'வீ ' வாகோஸ்கி சகோதரர்களின் 'வீ ' ஆவான். மொத்தத்தில் இந்த கதைக்களத்தை தேர்ந்தெடுத்தமைக்காக பாராட்டலாம் ஆனால் படம் நிரைவாக இல்லை.

March 10, 2006

1084'ன் தாய், ஆடமின் சகோதரி

"ஹசார் சௌராஸ்ஸி கி மா" மஹாஸ்வேதா தேவியின் புகழ்பெற்ற புதினம். இந்த புதினத்தை இதே பெயரில் கோவிந்த் நிஹ்லானி 1998ல் படமாக்கினார். எப்போதும் முகத்தில் புன்னகை தவழ நித்தம் தன்னை வளைய வந்துகொண்டிருந்த மகன் திடீரென்று ஓர் நாள் சவக்கிடங்கில் பிணமாக பார்க்கிறாள். போலீசுக்கு தன் மகனின் பிரேதத்தை அடையாளம் காட்ட செல்கிறாள். மகனின் பிரேதத்தின் என் 1084. இங்கு தொடங்குகிறது படம்.
நேற்று வரை உற்சாகமாக இருந்த தன் மகனா இது? என்ன ஆனது ஏன் நக்சலைட்டு இயக்கத்தில் பங்கு பெற்றான். இது நாள் வரை தனக்கு எப்படி தெரியாமல் போனது? அவன் நன்பர்கள் எல்லாம் யாரோ? பெயர்கள் தெரியும் ஆனால் அவர்கள் என்ன ஆனார்கள்? அவர்களும் மாண்டுவிட்டார்களா? அவர்களின் பெற்றோர்கள் எப்படி இந்த துயரத்தை எதிர்கொள்கிறார்கள்? தான் கல்யாணம் செய்து கொள்ளபோவதாக சொன்ன பெண்னை அறிமுகம் செய்யாமலே போய்விட்டானே, அவள் என்ன ஆனாள்? இப்படியாக பிரேதம் 1084'ன் தாயாக தன் மகன் தன் கடைசி நாட்கள் கழித்த இடங்கள், மனிதர்களை சந்திக்க முற்படுகிறாள். தன் உயிரையே கொடுக்கும் அளவிற்கு தீவிரமாக இருந்த அவனின் இன்னொரு முகத்தை அறிய ஆசைப்படுகிறாள். நேர்மையற்ற தன் கணவன், சுயநலமே உருவான தன் மகளா, யார் காரணம்? ஏன் இவர்கள் யாருமே இவனை புரிந்து கொள்ளவில்லை? என்று இப்படியாக பயனிக்கிறது படம். தாயாக நடித்துள்ள ஜெயா பச்சன் அட்டகாசம். மகனாக நடித்த ஜோய் சென்குப்தா தேவலை. மகனின் காதலியாக நந்திதா தாஸ் பிரமாதம். மகனின் குறிக்கோளை தொடர்ந்து எடுத்துச்செல்ல தன் மீதி வாழ்நாளை அற்பனிக்கிறாள். படம் முடியும் போது நம் மனதும் கனமாகிவிடுகிறது. இந்த மசாலா படங்களிலிருந்து விடுதலையாகி வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக பாருங்கள். நல்ல பதினங்களை ஆதாரமாகவைத்து எடுத்தால் உருப்படியாக தரமான படங்கள் உருவாக்கலாம் என்பதற்கு இந்த படமும் ஓர் சான்று.
எப்பவோ பார்த்த படமிது. திடீரென்று ஒரு நன்பரின் வலைப்பதிவில் அவர் சமீபத்தில் மாண்ட தன்னுடைய நன்பன் ஆடமின் இழப்பைப் பற்றி குறிப்பிட்டிருந்தார். அந்த மாண்ட நபரின் தங்கை இந்த 1084'ன் தாயைப் போல் தன்னை நெருங்கவே விடாத புதிரான சகோதரனைப் பற்றி அறிந்துகொள்ள இப்படி இட்டுள்ளார்...

Why make a blog now?

I made this blog b/c i wanted to leave a comment on one of my brother's friend's page. sounds like a bad family relation doesnt it?

Anywho they wrote some stuff about Adam that obvisouly i felt deserved a comment. It was great stuff too. You see, I just lost my brother and i feel compelled to talk to his friends, idk why. I think i just want to know if he talked about me as much as i talked about him or maybe its more selfish then that. There was alot my brother kept from me alot he kept from everyone, his life was divided into sections and only on a need-to-know baises did he tell you something. So i guess thats why i want to comunicate with his friends, b/c its now or never. Ill never have the chance to "need-to-know" and him tell me. Also i want to know more about him, now that hes gone....its so hard to comprehend that word, gone...i want to know what others thought of him. I know he was great but thats enough i need to know that so many other people saw what i saw. anyway i think i have enough of this done so that i can go probably freak out some stranger that knew nother/little of me. Sorry Stranger, but if you really knew Adam then i think youll understand why.

இதை படித்தவுடன் நெஞ்சம் மீண்டும் கனத்துவிட்டது. அப்படியே 1084'ன் தாய் கண் முன்னே வந்து போனார்.

March 04, 2006

கணினியில் தமிழ்: தமிழா பதிவு

முகுந்தராஜின் முன்னின்று நடத்தும் திறவூல தமிழ் மென்பொருள் குழு தமிழா புதிய வலைப்பதிவு ஒன்று தொடங்கியிருக்கிறது. இங்கு கணித்தமிழ், தமிழ் மென்பொருட்கள் மற்றும் தமிழா சம்பந்தமான திட்டங்கள், தலைப்புகள் மற்றும் சிந்தனைகள் இடப்படும். மொத்தத்தில் கணித்தமிழுக்கான ஓர் கூட்டுப்பதிவு இது.
கணினியில் தமிழ்: இன்றைய நிலை பற்றி என் முதல் கட்டுரையை இங்கே காணலாம்.