October 22, 2005

அறிவியல் புனைவு

சிஃபியில் தீபாவளி மலரில் என் அறிவியல் புனைவுச் சிறுகதை - குழந்தை எழுத்தாளர் கிருபா வெளிவந்துள்ளது. இது என் முதல் அறிவியல் புனைவு முயற்சி.

October 17, 2005

தோழி


எப்படிச் சொன்னாய் பெண்ணே
சில வாரங்களாய்த் தான் அறிவாயென்னை
நான் நினைத்ததில்லை
என்னை ஆக்கியோர் தந்த கண்ணியம்
அழகனில்லை
உன் பாலோரின் பித்தனில்லை
வெறியனில்லை வெருப்பவனில்லை
சட்டென நீ வம்பிழுக்கப்போகிறாய் என்றாய்
சீண்டினாய் நான் வெட்கித்தேன்
சுகமாய் இருந்தது
ரசித்துக் கொண்டிருக்கிறேன்
என்னை பிடிக்கிறது என் மொழியும் பிடிக்கிறதென்றாய்
உன்னளவில் என்னைப்போல் உன்னை நானறியேன்
அணுக நினைத்தேன் வாய்க்கவில்லை
நட்பின் படிவங்கள் பல அறிவேன்
கற்றது பிட்டளவே கற்க வேண்டியது டெர்ராக்கள்
ஏனோ பாரதி தோன்றிமறைகிறான்
புதிராக இல்லை புரியவுமில்லை
தன்னிலை அறிவேன் எல்லைகளறிவேன்
என்ன அவசரம்
ஒழிந்தபொழுது கண்விளி
பகிர்ந்துகொள்ள பிரபஞ்சமே கிடக்கிறது.


**கவிதை எழுதக்கூடாது என்ற விரதம் இத்துடன் முடிகிறது. :-) மீண்டும் சிறிது நேரத்தில் தொடங்கும்.**