
Matrix Trilogy கொடுத்த வாகோஸ்கி சகோதரர்கள் எழுதி/தயாரித்த, அவர்களிடம் துனை இயக்குனராக பணியாற்றியவரே இயக்கியிருக்கும் படம் . வாகோஸ்கி சகோதரர்களின் புரட்சிகரமான சிந்தனைகளுடன் இன்னுமொரு படம் (?). கொட்டகையில் பார்த்தே ஆக வேண்டுமென்று வெறியில்லை என்றால் வட்டு வந்தவுடன் பாருங்கள் போதும்.
V for Vendetta
அதிகாரபூர்வ தளம்
IMDB'ல்
கதை: வாழையடி வாழையாக சொல்லப்படும் கொடுங்கோல் ஆட்சி நடத்துபவனுக்கு எதிராக தனிய்யொரு மனிதன் எழுப்பும் புரட்சிக்கதைதான். திரைக்கதையில் ஆங்காங்கே பளிச். தவிர கதை 2020'ல் நடப்பதால் வைரஸ் தாக்குதல், அரசின் 24*7 கண்கானிப்பு போன்ற சமாச்சாரங்கள் இருக்கின்றன. கனிசமான அளவு ரத்தம் வழிகிறது. புரட்சிக்கூவல் விடுக்கும் முகமூடி மனிதனாக ஹியூகோ வீவிங், எதேச்சையாக இந்த புரட்சிப்போரில் உள்ளிழுக்கப்படும் பதுமையாக நேடலி போர்ட்மென் என்று எல்லா பாத்திரங்களும் கச்சிதமாகப் பொருந்தி நடித்திருக்க்கிறார்கள். தேவையான அளவு கிராஃபிக்ஸ் ஜாலங்கள்.
படத்தின் முக்கிய குறையே புரட்சியின் பிறப்பை சித்தரிப்பதில்தான். எல்லா தேர்ந்த கலைஞர்களையும் எப்போதாவது ஒருமுறையேனும் சுண்டியிழுக்கும் இந்த கதைக்களம்தான் பிரச்சினையே. சமீபத்தில் ஆய்த எழுத்தில் மணிரத்தினமும் சமூகத்தில் புரட்சிக்கான பிரத்தியேக ஃபார்முலாவை சித்தரிக்க முயன்று சுட்டுக்கொண்டது நினைவில் இருக்கலாம். தற்போதைய இந்த படம் நன்றாக தொடங்கியபின் பின்பாதியில் முடிவை நோக்கியிட்டுச் செல்லும்போது தொய்ந்துவிடுகிறது. மக்களின் கவனத்தை பெற்ற பின்பு அரசின் எதிர்ப்பைத் தாண்டி எப்படி தன் பக்கம் இழுக்கிறான் கதாநாயகன் என்பது நம்பும்படியாக இல்லை. 2020'ல் நிலவும் தொழில்நுட்பத்தை சித்தரிப்பதில் நிரைய கோல் விட்டிருக்கிறார்கள், ஸ்பீல்பெர்க் இந்த விஷயத்தில் கெட்டி.
படத்தின் மூலம் காமிக்ஸ் புக் என்றாலும் நான் அந்த காமிக்ஸை படித்ததில்லை. ஆனால் அந்த காமிக்ஸை உருவாக்கிய ஆலன் மூர் இந்த படத்தை அங்கீகரிக்க மறுத்துவிட்டார். ஆகையால் 'வீ ' வாகோஸ்கி சகோதரர்களின் 'வீ ' ஆவான். மொத்தத்தில் இந்த கதைக்களத்தை தேர்ந்தெடுத்தமைக்காக பாராட்டலாம் ஆனால் படம் நிரைவாக இல்லை.
5 comments:
நேத்து தியேட்டர் வரை போயிட்டு 15 நிமிசம் லேட்டாயிட்டதால ஒரு வேளை ஸேவிங் ப்ரைவேட் ர்யான் மாதிரி இருந்தா என்ன பண்றதுன்னு திரும்பி வந்திட்டேன்.
// கொட்டகையில் பார்த்தே ஆக வேண்டுமென்று வெறியில்லை என்றால் வட்டு வந்தவுடன் பாருங்கள் போதும் // ஸ்பெஷல் எஃபக்ட்ஸ் கூட அவ்ளோ மோசமாவா இருக்கு. (மாட்ரிக்ஸ் படம் தியேட்டரில் பார்ப்பதே சிறப்பு)
// புரட்சிக்கூவல் விடுக்கும் முகமூடி மனிதனாக // புரட்சிக்கூவல் விடுக்கும் எல்லாரும் ஏன் முகமூடி அணியிறாங்க ஹிஹி :))
அட ஆமாம், முதல் 15 நிமிஷம் கதைக்கு முக்கியம். எஃபக்ட்ஸ் நல்லாதான் இருக்கு ஆனா மேட்ரிக்ஸ் மாதிரி ஸ்பெஷலா ஒன்னும் இல்லை.
// புரட்சிக்கூவல் விடுக்கும் எல்லாரும் ஏன் முகமூடி அணியிறாங்க ஹிஹி :)) //
நீங்கதான் சொல்லனும்! உங்ககிட்ட ஏதாச்சும் திட்டம் இருக்கா? :-D
I don't agree with your comments about Maniratnam. The movie didn't do well, but it's a very good movie nevertheless.
சூரிய வெளிச்சமே, உங்க ஒவ்வாமையை மதிக்கறேன். ஆனா அது நல்ல படம்னு எல்லாம் சொல்லாதீங்க. தொழில்நுட்ப ரீதியில் பிரமாதம். சூர்யா பாத்திரம் எல்லாம் சும்மா ஹம்பக். அதுல நிஜம் 1% தான். புரட்சி அல்லது மாறுதல் அப்படி ஒரு கண நேர பேச்சுல வராது அப்படிங்கறத வலியுறுத்த விரும்புகிறேன்.
மேலும் உங்க வருகைக்கு நன்றி.
Post a Comment