நேற்று டென்சல் வாஷிங்கடன், ஜோடி ஃபாஸ்டர் மற்றும் க்ளைவ் ஓவன் நடித்த INSIDE MAN படம் பார்த்தேன். படம் ஆரம்பித்தவுடன் ஒரு இனிமையான அதிர்ச்சி! திடிர்னு தலைவர் ரஹ்மானோட தில்சே படத்தின் சைய்ய சைய்யா பாட்டு அலறுகிறது. ஆமாங்க என்னால நம்பவே முடியலை. படத்தோட ஆரம்பத்திலயும், முடிவுலயும் இரண்டு தடவையும் சைய்யா சைய்யா பாட்டு தான் பின்னனி இசை. கொஞ்சம் ரீமிக்ஸ் இருந்தது. ரஹ்மான் ஹாலிவுட்டில் பால் காய்ச்சியாச்சு. யாம் பெற்ற இன்பம் இவ்வுலகமும் பெறட்டும்! <விவரங்கள் இங்கே>
தலைவரோட சைய்யா சைய்யா பாட்டுதான் பாலிவுட்டில் ரஹ்மானின் அடையாளமாக விளங்குகிறது. முந்தாநாள் தான் "லார்ட் ஆப் தி ரிங்க்ஸ்" தலைவரோட இசையில் டொராண்டோல அரங்கேற்றம் பண்ணியாச்சு. ஆனா மந்தமான வரவேற்புதான் போல.
இன்சைட் மேன் படமும் நல்ல ஜோரா இருக்கு. வசனங்களும் ஆஹா ஓஹோ ரகம்தான். ஸ்பைக் லீ படம், வேற எதுவும் சொல்லலை, வேணும்னா இங்கு முன்னோட்டம் பாருங்க. படம் கண்டிப்பா பாருங்க.
3 comments:
Lord of War (Nicolas Cage) படத்திலும் பாம்பே தீம் வருகிறது. ஆப்ரிக்காவில் கேஜின் விமானம் பிய்த்தெடுக்கப்படும்போது.
ஒஹோ, தகவலுக்கு நன்றி ராமநாதன். அதைவிட இது அதிக பிரபலமாகக்கூடிய சமயங்கள் இது. பாடல் நடுவில் பிரமாதமாக அங்க அங்க கொம்பு வாத்தியம் சேர்த்து மெருகூட்டியிருந்தார்கள்.
wow,raheman music was used in hollywood....!!!-sanka from www.moderntamilworld.com,blogger-sankarkumarblog
Post a Comment