சில நாட்களுக்கு முன்னர் தட்ஸ்தமிழ்.காம் வலைத்தளத்தில் சென்னை மாநகர காவல்துறையின் சைபர்கிரைம் பிரிவின் திறமையான செயல்பாட்டை இந்த செய்தியில் படித்தேன். நிஜமாகவே சென்னை சைபர்கிரைம் பிரிவு பிரமாதமாக செயல்படுகிறது. இதை நான் நேரடியாக அனுபவித்துள்ளேன்.
கடந்த மே மாதம் நான் கோடை விடுமுறைக்கு சென்னை வந்திருந்தேன். நான் இங்கு தினம் பயன்படுத்தும் செல்ஃபோனையே புது சிம்கார்ட் போட்டு உபயோகித்தேன்.
ஒரு மாலை மேற்கு அண்ணாநகரில் என் கல்லூரி நன்பனுடன் கங்கா ஸ்வீட்சில் ஏதோ சாட் வகைகள் நன்றாக கபளீகரம் செய்துவிட்டு நன்பனின் வீட்டிற்கு சென்றேன். நன்பன் வீட்டில் காலடி வைத்ததும்தான் ஸ்வீட் கடையில் செல்ஃபோனை மறந்து விட்டுவந்தது உறைத்தது. உடனே கடைக்கு ஓடினால் அதற்குள் அதை யாரோ லவட்டிவிட்டார்கள். கடையிலும் யாருக்கும் ஒன்றும் தெரியவில்லை, அவர்களையும் குறை சொல்லமுடியாது. செல்ஃபோனுக்கு டையல் செய்தால் மணி அடித்தது ஆனால் யாரும் எடுக்கவில்லை. அவ்வளவுதான் செல்ஃபோன் இனி கிடைக்காது, என் தொடர்புகள் பொக்கிஷம் எல்லாம் அழிந்தது என்று நினைத்தேன். எதற்கும் முயற்சி செய்து பார்க்கலாமென்று கடைக்கு எதிரேயே உள்ள திருமங்கலம் காவல் நிலையத்திலும் புகார் செய்தேன். அங்கிருந்த ஏட்டு என்னை மேலும்கீழும் பார்த்துவிட்டு "என்னப்பா செல்ஃபோனெல்லாம் தொலைந்தால் கிடைக்குமா" என்றார். பொதுவாக ஒரு குழந்தையை தொலைத்தாலே கண்டுபிடிப்பது கஷ்டம், செல்ஃபோன் எம்மாத்திரம்.
ஆனால் பாருங்கள் பெரியவர்கள்தான் சொல்லியிருக்கிறார்களே "தம்பியுடையான் படைக்கஞ்சான்". வக்கீலுக்கு படிக்கும் என் தம்பியோ தனக்கு தெரிந்த ஒரு சைபர்கிரைம் இன்ஸ்பெக்டரிடம் பேசி ஒரே நாளில் கண்டுபிடித்து தருகிறேன் என்றான். அவன் சொன்னமாதிரியே மறுநாளே என் செல்ஃபோனும் கிடைத்தது. நம்பமுடிகிறதா?
இந்த சைபர்கிரைம் பிரிவிடம் செல்ஃபோன்களுக்கு ஒருவித விசேஷ கால் செய்யும் வசதியிருக்கிறது. இந்த விசெஷ கால் வந்தால் செல்ஃபோனில் எமர்ஜென்சி என்று வரும். முதலில் சைபர்கிரைம் பிரிவு இன்ஸ்பெக்டர் என் செல்ஃபோனிற்கு அந்த விசேஷ கால் செய்தார். எமர்ஜென்சி என்று வருவதுகண்டு செல்ஃபோனை அபகரித்த நபர் தெரியாமல் எடுத்து ஹலோ என்றிருக்கிறார். இதை இன்ஸ்பெக்டர் பதிவு செய்துவிட்டார். அடுத்து என் செல்ஃபோனிலிருந்து அன்று மாலை செய்யப்பட்ட கால்கள் பட்டியலை பார்த்தார். என் செல்ஃபோனை அபகரித்த நபர் என் ஃபோனின் நம்பர் என்ன என்று அறிந்துகொள்ள தன்னுடைய போனுக்கே சில கால்கள் செய்திருக்கிறான். இந்த இன்ஸ்பெக்டர் வரிசையாக என் செல்ஃபோனிலிருந்து காணாமல்சென்ற பிறகு கால் செய்யப்பட்ட என்கள் ஒவ்வொன்றாக டையல் செய்தார். அப்படி ஒரு காலில் எமெர்ஜென்சி காலுக்கு ஹலொ சொன்ன அதேகுரல் மீண்டும் பதிலளித்தது. திருடன் அகப்பட்டுக்கொண்டான். உடனே அந்த நபரின் ஃபோன் நம்பரை கண்டுபிடித்தார். பின் BSNL'இடமிருந்து அந்த நபரின் ஜாதகத்தையே சேகரித்தார். பின் அந்த நபரை ஃபோனில் மறுபடியும் கூப்பிட்டு உடனே என் செல்ஃபோனை உரியவரிடம் சேர்க்காவிட்டால் கைது செய்வேன் என்று எச்சரித்தார். என் செல்ஃபோனை அபகரித்தவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வக்கீல். போலீசின் எச்சரிக்கை கேட்டவுடனே அவருக்கு கதி கலங்கிவிட்டது. அடுத்த நிமிடமே என் வீட்டிற்கு அவர் ஃபோன் செய்து என் வீட்டிற்கே வந்து ஃபோனை திருப்பிதருவதாக சொன்னார். ஆனால் நானே நேரில் சென்று வாங்கிக்கொண்டென். அந்த இன்ஸ்பெக்டருக்கு தம்பி மூலமாக கோடானுகோடி நன்றிகளையும் தெரிவித்தேன்.
சென்னை மாநகர காவலின் சைபர்கிரைம் பிரிவு இவ்வாறாக என்னை வெகுவாக கவர்ந்துவிட்டது. அவர்களின் தேர்ச்சி எனக்கு பிரமிப்பாக உள்ளது. அவர்களுக்கு மறுபடியும் ஒரு சபாஷ்.
22 comments:
நீங்கள் சொல்வது வியப்பாக இருக்கிறது. இருந்தாலும் சொந்த அனுபவமாதலால் நம்புகிறேன். அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்
அட அந்த வக்கீல் ஒரு முட்டாள். அவர் மட்டும் செல்ஃபோனை அனைத்தே வைத்திருந்தாலோ, வேறு சிம்கார்ட் போட்டிருந்தாலோ கண்டுபிடித்திருக்க முடியாது. தன் நம்பருக்கே கால் செய்து பார்த்தது அதைவிட தவறு. எப்படியோ போலீஸ் புத்திசாலித்தனமாக செயல்பட்டது!
பகிர்தலுக்கு நன்றி. இதில் அனைவரும் உங்களுடைய புத்திசாலித்தனத்தை காட்டியுள்ளீர்கள், பாராட்டுக்கள்.
அட அந்த வக்கீல் ஒரு முட்டாள். அவர் மட்டும் செல்ஃபோனை அனைத்தே வைத்திருந்தாலோ, வேறு சிம்கார்ட் போட்டிருந்தாலோ கண்டுபிடித்திருக்க முடியாது.
True, you have to be smart to
plan for this.An intelligent thief
will first change the SIM card
or will sell it and vanish.
ம். ஆச்சரியம்!
அன்பு, என்ன சொல்லவர்ரீங்கனு புரியுது. ரொம்ப ஃபீல் ஆவாதீங்க. நம்ம லெவல் அவ்ளோதான்.
ரவி நீங்கள் சொல்வது முற்றிலும் சரி.
சுதர்சன், எனக்கும் ஆச்சர்யமோ ஆச்சர்யம். ஆனால் நேரில் பார்த்ததினால் மறுக்கமுடியவில்லை.
வக்கீலுக்கு படிக்கும் என் தம்பி
அந்த, அந்த, அந்த பாய்ண்ட்டாலதான் சைபர் க்ரைம் இன்ஸ்பெக்டரோட பேச முடிஞ்சு...ம்ம்ம்ம்.
ஆனா இந்த சென்னை போலீசைப் பத்தி மட்டும் சொல்லாத, ரொம்ப டென்ஷன் ஆகிடுவேன். செம்மத்தியான புத்திசாலித்தனம் மட்டும் இருந்து என்ன ப்ரயோஜனம், நல்லவங்களாவும் இருக்க வேண்டாமா?
என்ன பண்றது, நம்ப ரெண்டு பேர்மாதிரியும் எல்லாருமே இருக்கணும்னு எதிர்ப்பார்க்க முடியுமா...
ஆங், முக்கீயமா சொல்ல வந்த செய்தி ஒன்னு விட்டுப்போச்சு...வெள்ளக்கார டாக்டர்களத் தேடிக் கூட்டாந்து, பொன்னம்..ச்சே, பழக்க தோஷம்.
என்ன சொல்ல வந்தேன்னா,அடுத்த தடவல இருந்து மெட்ராஸ் வந்தா செல்-ஃபோனை என் கிட்ட குடுத்துட்டுப் போனா பத்திரமா பாத்துப்பேன். திரும்பவும் யூ.எஸ். போனாலும் கூட நானே இங்க பத்திரமா வெச்சுப்பேன்.
ஆமா, அந்த மோடம் ட்ரைவர் தம்பியா இந்த வக்கீல் தம்பி?
கிருபா, நல்லவங்களுக்கு இது காலம் இல்லை. என்ன பன்றது. அதே மோடம் டிரைவர் தம்பி தான்.
சைபர் கிரைம் போலீசுக்கு ஒரு "ஓ" போடுவோம்.
காவல்துறையினரைப் பற்றி நிறைய எதிர்மாறான செய்திகளுக்கு மத்தியில், சாதாரண மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதத்தில் இந்த மாதிரி நல்ல, நேர்மையான, புத்திசாலித்தனமான அதிகாரிகளும் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது :-) வாழ்த்துக்கள் யக்னா உங்களுக்கும், அந்த காவல்துறை அதிகாரிக்கும் :-)
வரவர போல்ஸ்காரெல்லாம் அநியாயத்துக்கு தெறமை காட்றாங்கப்பா!
நன்றி +ராமா, சோம்பேரி, மூர்த்தி. என்றும் அவர்கள் இப்படியே சேவை புரிய, கடவுளை பார்த்து ஒரு பெரிய 'ஓ' போட்டுவிட்டேன்.
அப்படியே நம்ம போலி டோண்டுவையும் பிடிச்சுடலாம்போலே இருக்குபா. நம்பிக்கை வருது. சிங்கப்பூரிலே கூட திறமையான போலீஸாமே. ரெண்டு போலீஸும் சேந்து ஒத்துழைப்பாங்களாமா?
அம்புடன்(no spelling mistake this),
டோண்டு ராகவன்
test
ம். அடுத்தமுறை களவெடுக்கும்போது நீங்கள் சொன்ன இந்த விசயங்கள் மட்டில் கவனமாயிருக்க வேண்டும். குறிப்பாக எமர்ஜென்சி என்று வரும் அழைப்புக்கள் விசயத்தில். தொழில் புரியும் என் நண்பர்களுக்கும் உடனடியாகவே எச்சரிக்க வேண்டும்.
நிறையத் தகவல்களைத் தந்துதவியதற்கு ரொம்ப ரொம்ப நன்றி.
"சபாஷ் சென்னை காவல் சைபர்கிரைம் பிரிவு"
நன்றி yagna
பாராட்டுகள் சென்னை காவல்
சைபர்கிரைம் பிரிவினருக்கு,
செல்லைப் பெற்றுத்தந்தமைக்கு.
ஆனா அநியாயமா குற்றவாளி தப்பிக்க க்ளூவும் குடுத்திட்டீங்களே
Dear Yagna,
It would be useful if you can give the details of how to complain to cybercrime branch. And the contact details of the cybercrime branch.
நீங்கள் குறிப்பிட்ட சம்பவம், மிகவும் அருமை. ஆணால், காவல் துறையை பாராட்டுவதற்கு ஓன்றுமில்லை.
காவல் துறை, இத்தகைய சேவையை அனைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கும் செய்யவேன்டியது கடமையாகும்.
True, you have to be smart to
plan for this.An intelligent thief
will first change the SIM card
or will sell it and vanish.
yaa,really chennai police is good!!-sankar from chennai
Post a Comment