தமிழ் மென்பொருள் பயனர் மற்றும் ஆர்வலர்களுக்கு ஓர் விண்ணப்பம்.
மையம்.தமிழ்மணம்.காம் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. இந்த விக்கி என்னுடைய முந்தைய பதிவில் கிடைத்த ஆலோசனைகளின் பேரில் நிறுவப்பட்டுள்ளது. இங்கே பல்வேறு தமிழ் கணினிமயமாக்கல் மற்றும் தமிழ் மென்பொருள் முயற்சிகளை ஓர் இடத்தில் தொகுக்க திட்டம். தற்சமயம் ஒரு தோராயமான வடிவமைப்பில் சில சோதனை தகவல்கள் உள்ளிட்டிருக்கிறேன். மேலும் அடி எடுத்து வைக்க தங்களின் ஆக்கப்பூர்வமன் கருத்துக்கள் மற்றும் உதவியை நாடுகிறேன். விருப்பமுள்ளவர்கள் இங்கே மறுமொழியிடவும். மேலும் விவரங்கள் விரைவில்...
5 comments:
இந்த இடுகைக்கு 'தமிழ் மென்பொருள் ஆர்வலர் மையம்' என்றே பெயரிட்டிருந்தால் சிறப்பாக இருக்கும்!
நண்பர் யக்ஞா முதல் அடி அடுத்துவைத்துள்ள இந்த முயற்சி வெற்றிபெற வாழ்த்துகிறேன். மேலும் பல ஆர்வலர்களும் பயனர்களும் பங்களிப்பார்கள் என்று நம்புகிறேன். இது பற்றி மேற்கொண்டு சில தகவல்கள்:
இது யார் வேண்டுமானாலும் பங்களிக்கக்கூடிய 'விக்கி' வடிவில் அமைந்த தளம். எனவே இதில் சொற்குறை, பொருட்குறை, எழுத்துப்பிழை எது கண்டாலும், காண்பவரே அந்தக்கணமே திருத்தி உதவலாம்.
நாம் தடைகளைக் கடந்து கற்றுக்கொண்டு முன்னேறிய கணியியல் படிகளை இங்கு பதிவு செய்வதன்மூலம் இதே தடைகளைக் கடக்க முயலும் இன்னும் பலருக்கு நாம் உதவமுடியும்.
இங்கு தகவலபெற்றுப் பயன்பெறும் ஒவ்வொருவரும், தங்கள் பங்களிப்பாகத் தங்கள் அனுபவம், மற்றும் தாங்கள் மேலும் கடந்த படிகளை சேர்க்கலாம்.
மீன்டும் ஒருமுறை, இது யாருடயை தனிப்பட்ட உடமை அல்ல, நம் அனைவருக்குமானது.
யக்ஞாவுக்கும், தமிழ் கணிமை முயற்சிகளில் அயராது பாடுபடும் அனைத்து முன்னோடி ஆர்வலர்களுக்கும் நன்றியும் வணக்கமும்.
அன்புடன்,
-காசி
நல்ல முயற்சி யக்ஞா. முனைப்புடன் செயலாற்றி தமிழ்மென்பொருள்களுக்காகவே ஒரு சமுதாய விக்கி அமைத்தமைக்குப் பாராட்டுக்கள். முடிந்த உதவி செய்கிறேன். நண்பர்களும் தகவல்களையிட்டு மேம்படுத்துவார்கள் என்று நம்புவோம். வாழ்த்துக்கள்.
மிக்க நல்ல முயற்சி .ஆர்வம் எடுத்து செயலாக்கிய அனைவருக்கும் எனது நன்றிகள்.பல தளங்கள் கூட்டுகுழுக்கள் இருந்தாலும் கணனி பிரச்சனை என்று ஒன்று வந்தால் கூகிள் கூட சாpயான தளத்தை கண்டுபிடித்து தருவதில்லை.எனவே இப்படி ஒன்று பலர் புழங்கும் ஒரு தளத்தில் இயங்குவது சாலச் சிறந்தது.
முடிந்தவரை நானும் இணைக்க முயற்சிக்கிறேன்.
யக்ஞா,
மிக நல்ல முயற்சி. என்னால் முடிந்ததை செய்கிறேன்.
அன்புடன்,
தேசிகன்
நன்றி காசி. இந்த விக்கியில் இன்னும் சில அடிப்படை தகவல்கள் உள்ளிட பாக்கியிருக்கிறது. இந்த விக்கியை பற்றி இன்னும் கொஞ்சம் விரிவாக பதியவுள்ளேன். அந்த பதிவுக்கு நீங்கள் கொடுத்துள்ள தலைப்பை உபயோகிக்க நினைத்தேன்.
நன்றி அன்பு, அப்படியே மக்களிடமும் இதை பரப்புங்கள்.
சுரதா, தாங்கள் கூறுவது சரியே. தங்களின் பங்களிப்பு கண்டிப்பாக தேவை.
தேசிகன், மிக்க நன்றி. உங்களுக்கு அனுப்பவேண்டிய மின்னஞ்சல் ஒன்று என் கணினியில் உறங்குகிறது. நாளை அனுப்புகிறேன்.
Post a Comment