கொஞ்சம் ஆழமாக சிந்தித்தால் ஒன்று புலப்படுகிறது, சிற்றுண்டிகளில் இந்த அடைக்கு நாம் அதற்குண்டான மரியாதையை கொடுப்பதில்லையோ. சற்று இவைகளைப் பாருங்களேன்.
"அம்மா நாளைக்கு காலை சீக்கிரம் கிளம்பனும்".
"சரிடா இட்லி பண்ணிடறேன்" - அம்மா
"என்னங்க சாயங்காலம் வர லேட்டாகும் தோசை மாவு ஃபிரிட்ஜில இருக்கு, பார்த்துக்கங்க..."
எப்போதும் அவசரத்திற்கு இட்லி, [அரைத்த] தோசையை தான் உதவிக்கழைக்கிறோம். இல்லை உடனடி தேவையாக இருந்தால் கரைத்த தோசை, உப்புமாதான். தெருவோர கடைகளில் கூட இட்லி தோசைதான் விற்கிறார்கள். இன்னும் இட்லி, தோசை, உப்புமா போன்ற திடீர் மிக்ஸ்கள் கிடைக்கின்றன் ஆனால் அடை மிக்ஸ் கேள்விப்பட்டிருக்கிறோமா? பொதுவாக அடை எப்போதும் சட்டென்று தோன்றும் தீர்வாக இருப்பதில்லை. இதற்கான காரணம்தான் என்ன? இன்னும் ஆழமாக ஆராய்ந்தால் இதற்கு அடையின் அடக்கமே காரணமென்று தோன்றுகிறது!
திருதராஷ்டிரன் சபையில் பீஷ்மரைப் போல் சிற்றுண்டிகளில் அடை. எல்லோரையும்விட வல்லவர் ஆனாலும் ஒரு அவையடக்கம். அடையில் அரிசிக்கு சமமாக அனைத்து பருப்புகளும் இருக்கிறது. கார்போஹைட்ரேட்ஸ் [தமிழ்ல என்னங்க?] புரதச்சத்து எல்லாம் வேண்டிய அளவு இருக்கிறது. ஊரப்போட்ட இரண்டு மணி நேரத்தில் அரைத்து வார்க்க அடைமாவு தயார். சாதாரணமாக ஒருவர் இரண்டு அல்லது மூன்று அடை உண்டாலே வயிறு நிரைந்துவிடும். இப்படி ஒரு முழுமையான பண்டமாக இருந்தாலும் அவசர யுகத்தில் தோசை இட்லியுடன் முண்டியடிக்காமல் ஒரு அடக்கம் [அதாங்க அவையடக்கம்] காக்கிறது. இதுவே இதன் சிறப்புமாகும்.
ஊறவைத்த ஒரு குவளை அரிசிக்கு ஒரு குவளை ஊறவைத்த பருப்பு [துவரை+கடலை+கொஞ்சம் உளுந்து] மிளகாய் வற்றல்கள், கொஞ்சம் உப்பு சேர்த்து சற்று கரகரப்பாக அரைத்த மாவில் இஞ்சி, கருவேப்பிலை சேர்த்து சற்று மிதமான தீயில் வார்த்தெடுத்தால் அடை தயார் [செய்முறைகள் இங்கே] . இதில் கொஞ்சம் கொண்டகடலை சேர்த்தரைப்பதும் ஒரு வகை. நவீன உனவுப் பதார்த்தங்களின் முடிசூடா மன்னனாக விளங்கும் பீட்சாவை போன்று அடையும் பல டாப்பிங்குகளில்[toppings] செய்யலாம். முருங்கைக்கீரை அல்லது கைக்கெட்டும் சில கீரைவகைகள், முட்டைகோஸ், காரெட், வெங்காயம் போன்றவை பொதுவாக பயன்படுத்தபடும் டாப்பிங்காகும். அடை வார்க்கும் கல்லில் ஒரு கரண்டி மாவைவிட்டு தோராயமாக வட்டவடிவில் அல்லது டெட்டிபேர் [teddy bear] போன்று தங்கள் கற்பனைக்கு எட்டும் வடிவில் தட்டி இந்த டாப்பிங் ஏதேனும் மேலே தூவவும். அடையின் ஓரத்தை சுற்றி எண்ணை/நெய் விடவும். அடை நன்றாக வேக நடுவிலோ அல்லது தங்களின் வடிவகணித ஞானத்தை பயன்படுத்தி வேறு தோதான இடங்களில் சில ஓட்டைகள் ஏற்படுத்தி ஓரிரு முட்டை எண்ணை விடவும். அடையின் மேற்பகுதிவரை வெந்தபின் அடிப்பகுதி நன்றாக சிவந்தவுடன் திருப்பிப் போடவும். ஓரிரு நிமிடங்களில் இந்தப் பக்கமும் சிவந்தவுடன் எடுத்தால் அடை சாப்பிட தயார். தயாரான அடை கீழே லா.ச.ரா வர்ணிப்பதுபோல் இருந்தால் பிரமாதம். அடையுடன் கூட சாப்பிட வெறும் வெல்லம் அல்லது மிளகாய்ப்பொடி மற்றும் அவியல், சாம்பார் போன்ற வெங்சனங்கள் மிக பிரபலம்.
இன்றைய தேதியில் ஒவ்வொரு நவீன சந்தைப் பொருளுக்கும் ஒரு மினி உரு இருப்பதுபோல் அடைக்கும் மினிஅடை உருவமொன்று இருக்கிறது. அதுதான் தவலைஅடை [கீழே படம் காண்க].
அடையைப்பற்றி இன்னும் சில புள்ளி விவரங்கள்:
- தோசை, இட்லி இவைகளை வார்க்கலாம், குத்தலாம் ஆனால் அடையை மட்டுமே தட்டலாம். :-D
- காரடையான் நோன்பு என்று அடையின் முக்கியத்துவத்தை ;-) குறிக்கும் ஒரு சடங்கே உள்ளது. சிற்றுண்டி உலகில் அடைக்கு மட்டுமே இந்த பெருமையுண்டு.
- அடைமொழி, அடை மழை போன்று தனிச்சிறப்பான பிரயோகங்கள் அடைக்கு மட்டுமே உண்டு.
* * * * * * * * * * * *
"டேய் எழுந்திருடா. என்னடா அடைக்கு ஊறப்போட்டுட்டு தூங்கிட்டையா? என்ன கனவுலகத்துல யாரப்பத்தி யோசனை?"
"ஹி..ஹி..எல்லாம் அடையை பத்திதான்!!!"
5 comments:
என்னுடைய ஃபேவரிட்டான 'அடை'யின் மகாத்மியம் என்னை மெய் சிலிர்க்க வச்சுட்டது. இது பொய் இல்லை.
அடைமாவை ஃப்ரீஸ் செஞ்சு வச்சுக்கலாம். ஒண்ணும் ஆகாது. இது அதோட எக்ஸ்ட்ரா க்வாலிட்டி!
நான் ரெண்டு அடைக்குள்ள மாவைத் தனித்தனி கண்டெயினரில் வச்சிருக்கேன்.
ஈஸிப்பீஸி ப் பலகாரம்!
ஆனா இந்த தொட்டுக்கறதுக்கு அவியல் காம்பினேஷன் எப்படி வந்துச்சுன்னு தெரியலை. அவியல் கொஞ்சம் 'ஹெவியா' இருக்காதா?
அடை வெல்லம்/ அடை சட்டினிக்கே என் ஓட்டு!
என்னுடைய ஃபேவரிட்டான 'அடை'யின் மகாத்மியம் என்னை மெய் சிலிர்க்க வச்சுட்டது.
thuLasi akkA, AhA pramAdham. I'll try this freezing technique. Adai/Vellam my favorite combination too!
«¨¼ Á¸¡òÁ¢Âõ ¿ýÈ¡¸§Å þÕ츢ÈÐ. º¢Ä º¢ýÉì ̨ȸû. þó¾ È ±ØòÐ ºüÚò ¾¢ñ¼¡Î¸¢ÈÐ ¯í¸û ‘¸Å¢¨¾’¢ø .
«¨¼ìÌ °Ãô §À¡ÎÅÐ ºÃ¢Â¢ø¨Ä ±ýÚ ¿¢¨É츢§Èý. °Èô §À¡ÎÅо¡ý ºÃ¢Â¡¸ þÕìÌõ. «Ð °Ã ¬ÃõÀ¢ò¾¡ø ¾¨Ã¦ÂøÄ¡õ Ш¼ì¸ §ÅñÊ ÅÕõ!
Å¢Úõ ¿¢¨ÃÂì ܼ¡Ð, ¿¢¨È §ÅñÎõ.
Ó¾ø ÀÊôÀ¢ø þùÅÇ×¾¡ý À¡÷ò§¾ý. ÐÅì¸ò¾¢§Ä§Â Ì¨È ¦º¡øÅÐ ¿øÄ ÐÅì¸Á¡ ±ýÚ §¸ð¸ Á¡ðË÷¸û ±ýÚ ¿¢¨É츢§Èý. «ó¾ì ¸¡Äò¾¢ø Àò¾¢Ã¢¨¸ ¿¼òÐõ§À¡Ð ¨¸Â¢ø º¢øÄ¨È¾¡ý þÕó¾Ð, «¾É¡ø «îÍô À¢¨Æ¨Â ±øÄ¡õ ¿¡í¸§Ç ´ì¸ô Àñ½ §ÅñÊ þÕó¾Ð. «¾üÌô À¢ÈÌ ´Õ Òò¾¸ò¨¾ì ܼ ÓýÒ §À¡Äò Ðâ¾Á¡¸ Å¡º¢ì¸ ÓÊ¡Áø §À¡Â¢üÚ.
´Õ ¿‰¼õ.
¬É¡ø ±¨¾Ôõ ÑÏ츢 Å¡º¢ìÌõ ÀÆì¸õ º¢È¢¾¡ÅÐ Åó¾Ð. ´Õ Ä¡Àõ.
«¨¼ Á¸¡òÁ¢Âò¾¢ø Ó¾ø À¡¾¢ Å¡º¢òРŢðÎ, Á£¾ò¨¾ µð¼Á¡¸ô À¡÷ò§¾ý. Ä¡.º.á Á£Ð ¦Á¡ò¾ì ÌÎõÀòÐì̧Á À¡º§Á¡ ±ýÚ §¾¡ýÈ¢ÂÐ. «ÅÕõ ¯ñÊô À¢Ã¢Â÷¾¡ý. ¦À¡Õò¾Á¡É §Áü§¸¡û¾¡ý.
ÃÅ¢ºí¸÷
I used the anjal fonts in the above comments. Am not sure how to convert them into tamil in this box. How did the previous comments appear in Tamil? You did not offer any ideas on these pages did you?
Ravishankar
adaiis my favourite home food.but vey rarely have i thought abt it when i was in hotels.will surely go for it from now on.Adai Aviyal became famous for A.A. looks attractive to see and to hear.
Best World Hotels is your number one resource for finding worldwide hotels. Also if you're traveling to Cancun or Costa Rica visit..
Travel to Cancun and Costa Rica Links
Post a Comment