June 28, 2006

Superman Returns = சூப்பர் சுப்புனி ரிடர்ன்ஸ் : விமர்சனம்

சுடச்சுட பிரிவியூ ஷோ பார்த்துட்டு வந்தேன். X-men 1 & 2 எடுத்த பிரையன் சிங்கர் இயக்கத்தில் புது பொலிவுடன் சூப்பர்மேன். சற்று நீளமான படத்தில் எல்லோரையும் காப்பாற்றும் சூப்பர்மேன்தான் இந்த படத்தையும் காப்பாற்ற ஏதாவது செய்யவேண்டும். சொத்தை படம்!
நெடுநாள் கழித்து திரும்பி வரும் சூப்பர்மேன் தான் விட்ட இடத்தில் இருந்து தன் வாழ்வை தொடங்க முயல்கிறார். அதே வேலை கிடைக்கிறது, அதே காதலிக்கும் ஆசைப்படுகிறார். படத்தின் ரசிக்கத்தக்க ஆனால் கடைசியில் புஸ்ஸாகும் வழக்கமான மொட்டை பாஸாக (எனக்குப் பிடித்த) கெவின் ஸ்பேசி, சூப்பர்மேனாக பிராண்டன் ரூத், லோய்ஸ் லேனாக கேட் பாஸ்வர்த் ஆகியோர் குறையில்லாமல் வேலை செய்திருக்கிறார்கள். பிரும்மாண்டமான சாகசங்கள் எல்லாம் பிரமிக்கும்படியாக காட்டுகிறார்கள். ஆனால் சரி இனி என்ன, எப்படி வில்லன் செக்மேட் செய்யப்போகிறான் என்று நாம் நிமிர்ந்து உட்காரும்பொழுது ஆட்டம்பாம் வெடிக்க நாம் காத்திருக்க சின்ன பிஜிலி வெடிப்பதுபோல் கிளைமேக்ஸ் சொத்தென்று முடித்திருக்கிறார்கள்.
படத்தில் நம்மூர் பாலிவுட் சொல்லப்போனால் கோலிவுட்டின் வாசம் நிறைய வீசுகிறது. வழக்கமான சூப்பர்ஹீரோ படம்போல் இல்லாமல் சற்று மண்வாசம் கலந்து இன்றைய ரசிகர்களை கவர சூப்பர்மேனின் உணர்ச்சிப்
போராட்டங்களை மையமாகவைத்து கதை பின்னப்போவதாக சொன்னார்கள். உணர்ச்சிகள்னா காதல் ரசத்த விடமுடியுமா? நம்ம கோலிவுட்ல மணிரத்னம் முதல் அனைவரும் சொல்லும் விஷயம் அதுதானே. சரி நிரைய காதல் சேர்த்து அப்படியே ஒரு தாய் செண்டிமெண்டும் சேர்த்துட்டா நம்மூர் ஃபார்முலா கிண்டிடலாம். ஆனா இங்கதான் ஹாலிவுட் ட்விஸ்ட்! தாய் செண்டிமெண்டிற்கு பதில் தந்தை செண்டிமெண்ட். என்ன நம்மூர் மாதிரி பாட்டுதான் மிஸ்ஸிங் (சொல்லமுடியாது ஹிந்தி/தமிழ் டப்பிங்கில் சேர்க்கலாம்). மத்தபடி இது சூப்பர்மேன் ரிடர்ன்ஸ் இல்லை, சூப்பர் சுப்புனி ரிடர்ன்ஸ்!

நீங்க கஜேந்திரா படம் பார்த்திருந்தா இந்த படத்தோட கதைக்கான க்ளூ உங்களுக்கு கிடைச்சாச்சு. உ-ம்: கஜேந்திராக்கு ஷாக் குடுத்தா அந்த கரண்டுக்கே ஷாக் அடிக்கும்! ஆனா கஜேந்திரா லெவலே வேற, புரட்சித்தலைன்னா சும்மாவா? :-D

3 comments:

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

//மத்தபடி இது சூப்பர்மேன் ரிடர்ன்ஸ் இல்லை, சூப்பர் சுப்புனி ரிடர்ன்ஸ்!//

:))

கெவின் ஸ்பேஸி ஃபேனா? வாழ்க! :)

நானும் கெவின் ஸ்பேஸி வில்லன்னு தெரிஞ்சதும் பாக்கலாம்னு இருந்தேன். காப்பாத்தினதுக்கு நன்றி யக்ஞா.

Yagna said...

வாங்க மதி, கெவின் ஸ்பேசி கலக்கலான நடிகர். பொறுமையா டிவிடி வந்தபிறகு ஓசில பாருங்க போதும்.

நன்றி சிவராமன், நானும் கொஞ்சம் எதிர்பார்ப்புகளோடுதான் போனேன். கவுத்துட்டாய்ங்க!

Anonymous said...

ஷாக் கொடுத்தா fuse வெடிப்பது கஜேந்திரா இல்லை, நரசிம்மா!

வாழ்க Captain ! :)