June 27, 2005

அண்ணா பல்கலைக்கழகம்: ஒரு வழியாக புதிய துனைவேந்தர்

இரண்டு தினங்களுக்கு முன் அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துனைவேந்தராக பேராசிரியர் விசுவநாதன் நியமனம் செய்யப்பட்டார். பேரா. விசுவநாதன் இயந்திரப் பொறியியல் துறையில் மைய்யப் பணிமனையின் தலைவராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
எனக்குத் தெரிந்து கடந்த எட்டு வருடங்களில் இவர் அந்த பக்கமாக வந்ததே கிடையாது. இந்த முறை எப்போதும் இல்லாதவகையில் நிறைய குழப்படிகளின் மத்தியில் புதிய துனைவேந்தர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முதலில் ஒரு தேர்வுக்குழு அமைத்து அதன் பரிந்துரையின்படி தமிழக ஆளுநர் புதிய துனைவேந்தரை நியமனம் செய்யவேண்டும். ஏப்ரல் மாதத்தில் அப்படி ஒரு குழு அமைக்கப்பட்டு அப்போதைய துனைவேந்தராக இருந்த முனைவர் பாலகுருசாமியின் பெயரையே அது பரிந்துரைத்தது. உடனே ஆளுநர் அந்த தேர்வுக்குழுவின் பணியில் திருப்தியில்லை என்று அதை கலைத்துவிட்டார். பின் ஒன்னரை மாதமாக முதல்முறையாக துனைவேந்தரே இல்லாமல் அண்ணா பல்கலைகழகம் இயங்கிவந்தது. இப்பொழுது இரண்டு நாள் முன் திடீரென்று புதிய நியமனம் செய்யப்பட்டுள்ளது. இன்றைய தேதியில் அண்ணா பல்கலைக்கழக துனைவேந்தர் என்பது பெரிதும் முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் பதவியாகிவிட்டது. திமுக ஆட்சிக்கு வந்தால் ஒருவர், அதிமுக வந்தால் அவர் நீக்கப்பட்டு வேரொருவர் என்று மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். முன்னாள் துனைவேந்தர்கள் குழந்தைசாமி, அனந்தகிருஷ்ணனுக்கு பிறகு நிலையாக எவரும் செயல்படவில்லை. எங்குபோய் முடியுமோ தெரியவில்லை. அண்ணா பல்கலைகழகம் போன்ற அதிமுக்கியமான ஸ்தாபனத்தில் அதுவும் தனியார் கல்லூரிகளின் ஆதிக்க சண்டை நடந்துவரும் இவ்வேளையில் இப்படி ஒரு நிகழ்வு அதிர்ச்சியளிக்கிறது.

3 comments:

இரா. செல்வராசு (R.Selvaraj) said...

யக்ஞா, இவரை எப்படியோ எனக்கு நினைவிருக்கிறது. எங்களுக்கு வகுப்புக் கூட எடுத்திருக்கலாம். (ஏசிடெக்கில்). துணைவேந்தர் ஆகும் அளவிற்குத் தகுதி வாய்ந்தவரா என்பது ஆச்சரியம் அளிக்கிறது. இதில் அரசியல் இருக்கும் என்று யோசிக்க வைக்கிறது.

Yagna said...

அட செல்வராஜ் ஐயா, இதுல யோசிக்கற அளவுக்கு ஒன்னுமே இல்லை. இந்த மே மாதம் கல்லூரிக்கு[CEG] சென்றேன். நிறைய கேள்விப்பட்டேன். அரசியலன்றி வேறொன்றும் இல்லையாம். இவர் இந்த AVRC மற்றும் சில UGC சம்பந்தமான பொருப்புகள்ல இருந்திருக்கிறார். ரொம்ப நாளா இருக்கார், சொல்லனுமா?
அப்புறம் எந்த வருஷம் நீங்க?

இரா. செல்வராசு (R.Selvaraj) said...

தெளிவாத் தெரியுதுண்ணு சொல்லத்தான் நினைத்தேன். அந்தப் பக்கமா வந்து ரொம்ப நாள் ஆகிவிட்டதே. அப்புறம் எப்படி அப்படிச் சொல்றதுன்னு யோசிக்க வைக்கிறதுன்னுட்டேன்.
நான் 91-லே வெளியே வந்துட்டேன். எங்களுக்கு DV (அப்படித்தான் கூப்பிடுவோம்)ஏழாவது எட்டாவது பருவத்தில் ஏதோ பாடம் எடுத்து ஒப்பேத்தியதாக நினைவு.

ஆகா...நினைவுக்கு வருகிறது... மாணவர்களிடம் மிகவும் அடக்குமுறை காட்டியவர். கால்களை நீட்டி உட்காரக் கூடாது, இந்தப் பக்கம் அந்தப் பக்கம் திரும்பக் கூடாது என்று அவசியமற்ற கறார்ப் பேர்வழி! இன்னும் யோசித்தால் எதாவது நினைவுக்கு வரும். எதற்கு வெட்டி வேலை என்று விட்டுவிடுகிறேன்.