"வணக்கமுங்க. எம் பேரு ஃபோர்டுங்க, அதாங்க ஹென்றி ஃபோர்டு. நம்ம கம்பேனி காரு வாங்குங்க. நம்ம கம்பேனி பாடல்பெற்ற ஸ்தலமுங்கோ. அட நம்ம கம்பேனி உள்ள ஊரு பாடல்பெற்ற ஸ்தலமுங்க. ஒரிஜினல் டாடா இரும்புல செஞ்சதுங்கோ. வாஸ்து பாத்து கட்டினதுங்கோ."
"இந்தா அவரு பேச்ச கேக்காத நைனா. நான் ஹுண்டாய்'மா. நம்ம காரு முழுக்க அசல் சேலம் ஸ்டீல்'மா. ஷாரூக் ஓட்டறாரு. அம்மா அசின் ஓட்டறாங்க. அந்தாள் காரு விலைல நம்ம வண்டி ரெண்டு வாங்கலாம்."
அய்ய மூஞ்சியபாரு. நீ நம்ம கடைக்கு வா சார். நம்மள்து பி.எம்.டபிள்யூ. பேரை சொல்லிபாரு இன்னா மர்யாத வெளில. ஒவ்வொரு காரும் உங்க அதிர்ஷ்ட கல்லு பதிச்சு அதிர்ஷ்ட எண்னுக்கு மந்திரிச்சு தருவோமுங்க...
...இதுபோல இன்னும் வோல்ஸ்வாகனம், சி.எம் மண்ணிக்கனும் ஜி.எம் அல்லாரும் வெய்ட் பன்றாங்கோ.
இதெல்லாம் மெய்யாகும் நாள் வெகு தூரத்தில் இல்லை. நேற்றைய வாஷிங்க்டன் விகடன் அதாங்க washington post'ல சென்னை அடுத்த டெட்ராய்டா அப்படினு வந்திருக்கு. சென்னையில் வாகண உதிரிபாகங்கள் தொழில் சமர்த்தாக வளர்ந்து வருகிறது. ஆட்டோலெக், விஸ்டியான், டி.வி.எஸ், யூகால், ரானே போன்றவர்கள் சர்வதேச அளவில் பேர் பெற்றவர்கள். மேலும் மேற்கூறிய வாகன உற்பத்தியாளர்களும் சென்னையில் கடை விரித்துள்ளனர். முன்னே கூறிய நம்ம ஊர் கம்புனியெல்லாம் ஜப்பானிய "தரமே நிரந்தரம்" சித்தாந்தத்தை கடைபிடிப்பவர்கள். ஆகையால் எதிர்காலம் சுபிட்சமாக உள்ளது இவர்களுக்கு. இது சம்பந்த்மாக டி.வி.எஸ்'இன் வெற்றிக்கதை ஒன்று எழுதவேண்டும். அது இன்னொரு நாள்...
6 comments:
பயனுள்ளக் கட்டுரை. சென்னை எங்கேப் போகிறது?
பதிவுக்கும், தகவலுக்கும் நன்றி.
டி.வி.எஸ்'இன் வெற்றிக்கதை ஒன்று எழுதவேண்டும். அது இன்னொரு நாள்...
கண்டிப்பாக விரைவில் எழுதுங்கள், காத்திருக்கிறோம்.
ஏன் ஜெயலலிதாவை பற்றி எழுதியதை கூறவில்லையே? யக்ஞா, அதையும் கூறவும்
NY Times is also doing a four part series examining India's highway modernization, reflecting the country's overall transformation.
Mile by Mile, India Paves a Smoother Road to Its Future - Building a Superhighway
In Today's India, Status Comes With Four Wheels - The Car Boom
1. Thanks, mansoor.
2. Anbu, I'll try to do that this break.
3. Vijay :-D
4. Bala, Thanks for the links. I had read the first one.
I was reading this on the post yesterday evening. Proudly circulated around my train friends... way to Go சென்னை ..:)
Post a Comment