ஒரு அரை மணி நேரம் கழித்து 'நங்' என்று சத்தம் வந்தது. அவர்கள் என் ஜன்னலின் வெளித்தட்டில் முதல் (கல்) குச்சியை நட்டனர், சரி சரி, வைத்தனர்.
நேற்று பார்த்தேன், இரண்டு ரோஸ் நிற முட்டைகள் தயார். அப்ப அப்ப திரும்பி வாகு மாற்றிக்கொண்டு மறுபடியும் ஒரு 'குருகுக்கூஉ உ '. நல்ல வெயில் காய்கிறது. முதல் மாடியில் வாசம். நேரம் கிடைச்சா அப்படியே எட்டி நம்ம கணினித் திரையில் லேட்டஸ்ட் நியூஸ் மேலோட்டம் விடுவார். நான் கேட்கும் இசை பிடிச்சா நம்ம பக்கம் பார்கிறார் பிடிக்கலைன்னா அப்படியே கழுத்தை மட்டும் திருப்பிக் கொள்கிறார். ரொம்ப ஸ்டிரிக்டு.
வேற வேலையே ஓடறதில்லை. எப்பொ குஞ்சு பொரியுமோ தெரியலை. புத்தாண்டு ரிலீசுக்காக வெய்ட்டிங்!
5 comments:
:)
கனவுகள், கற்பனைகளைவிட, ஜன்னல் வழியே பார்க்கிற நிஜங்கள்...பார்ப்பதற்கும், பதிவதற்கும், படிப்பதற்கும், சுகமாகத்தான் இருக்கிறது
அன்பு யக்ஞா,
அருமை! குழந்தை 'பொரிச்சவுடன்' படம் போடுங்க!
அம்மா ஜாடையா இல்லெ அப்பாவான்னு பாக்கணும்-)))))
என்றும் அன்புடன்,
துளசி.
பாலு, அது என்னமோ சரிதான். ஒரு விதத்தில் குழந்தைகள் மற்றும் பிரானிகளின் உலகே தனி. அவர்களுக்கு கள்ளம் கிடையாது, எதிர்பார்ப்புகள் கிடையாது.
துளசி, கண்டிப்பா போடுறேன். அப்படியே ஜாடையும் சொல்லிடுங்க. :-p
அடேங்கப்பா !!
Post a Comment