"வெல்லத் தமிழ் இனி மெல்ல சாகும், கணினித் தமிழே இனி வாழும்"
என்பது எல்லோரும் அறிந்ததே. :-D. திடீரென்று தமிழ் புத்தாண்டிற்கு இந்திய அரசு சில தமிழ் மென்பொருள்களை பொட்டலம் கட்டி ஒரு வட்டு வெளியிட்டிருக்கிறது. தமிழில் அவ்வளவு மென்பொருட்கள் வந்துவிட்டனவா? எப்படி, யார் உருவாக்கினார்கள் இவைகளை? தன்னலமில்லா பல மனிதர்களின் உழைப்பு இதில் இருக்கிறது.
எல்லா நல்ல காரியங்களையும் போல் தமிழை கணினிமயமாக்க
- தன்னார்வலர்கள் தான் நிறை(ர)ய செய்கிறார்கள்
- இவர்களையும் இவர்கள் பங்களிப்பையும் ஒரு சிறு வட்டத்திற்கு வெளியே தெரியாது
- சந்தையில் வரவேற்பு மந்தம்தான்
- பெரும்பாலும் அரசுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை
திறமூல முயற்சிகள்
அ. லினக்ஸ்
கணினியின் பிரதானமான மென்பொருள் 'இயங்குதளம்' ஆகும். பரவலான லினக்ஸ் பொதிகள் தற்போது தமிழில் கிடைக்கிறது. வெங்கட் நிர்வகிக்கும் தமிழ் லினக்ஸ் புதிய வலைமனையில் (இன்னும் கட்டுமானத்தில் உள்ளது) மேலும் தகவல்கள் காணலாம். பழையது இங்கே. இதையும் படிக்கலாம். தமிழ் லினக்ஸ் - சில பொதிகள்
- மாண்ட்ரிவா (போன வாரம் வரைக்கும் மாண்ட்ரேக், கனெக்டிவா)
- ரெட் ஹேட்/ஃபெடோரா, தற்போதைய நிலவரம்
தமிழில் ஓபன் ஆஃபீஸ் முதலில் மொழியாக்கம் செய்ய ஆரம்பித்தது இந்திய அரசின் பாரதீய குழுவே. அடுத்து முகுந்தராஜ் ஒருங்கினைக்க முனைந்தார். பிற்பாடு 'ழ' கணினி குழு சேர்ந்துகொண்டது.
இ. க்னோம்/ கே.டி.ஈ
இது லினக்ஸ் சம்பந்தப்பட்டது. லினக்ஸ் இயந்குதளத்தின் கெர்னல் (மூலவர்) மற்றும் பயனருக்கும் இனைப்பாக இருக்கும் மென்பொருள்.
ஈ. மொசில்லா/ஃபயர்ஃபாக்ஸ்
தமிழில் மொசில்லா/ஃப்யர்ஃபாக்ஸ் முற்றிலுமாக மொழியாக்கம் செய்தது முகுந்தராஜ்/இளஞ்செழியனின் தமிழா குழுவினர்.
உ. இதர விஷயங்கள்
இதை தவிர நியூக்லியஸ், டக்ஸ் பெயிண்ட் போன்ற மென்பொருட்களும் தமிழில் கிடைக்கின்றது. இவற்றுக்கான சுட்டிகள் பின்னர் தருகிறேன்.
மற்ற முயற்சிகள்
அ. எழுத்துருக்கள்
தமிழ் எழுத்துருக்களில் சின்னதுரை ஸ்ரீவாஸ் மற்றும் உமர் தம்பி அவர்களின் பங்கு மிகவும் குறிப்பிட வேண்டியது.
- ஸ்ரீவாஸின் ஆவரங்கால், எழுத்துச்சீர்மை
- உமரின் ஒருங்குறி எழுத்துருக்கள்
- மேலும் சில எழுத்துருக்கள் தமிழாவிடமிருந்து
இது வேற ஒன்னுமில்லை, எந்த ஒரு விசைப்பலகையை கொண்டும் தமிழில் தட்டச்ச பயன்படுத்தும் மென்பொருட்கள்தான் இவை. எ-கலப்பை, முரசு போன்றவை.
- முகுந்தராஜின் எ-கலப்பை: பழசு (சில பேருக்கு இதுதான் வேலை செய்கிறது, அதான்), புதுசு
- முரசு
- சுரதாவின் பொங்குதமிழ். மேலும் சில கருவிகள்
மைக்ரோசாப்ட் இந்திய மொழிகளில் தன் ஆஃபீஸ் பொதிகள் பயன்படுத்துவதற்காக பாஷா என்றொரு தன்னார்வலர்கள் (இங்கேயா?) மூலம் இயங்கும் திட்டம் கொண்டுவந்தது. தமிழ் பகுதியை மாலன் ஒருங்கினைத்தார்.
ஈ. இதர விஷயங்கள்
மேலே சொன்ன முயற்சிகள் தவிர மதுரை திட்டம், கலோன் பல்கலைகழகத்தின் நிகண்டு, முரசு, பொன்விழி போன்ற சிறப்பான முயற்சிகளும் நடந்துகொண்டிருக்கின்றன. இன்னும் விபரங்கள் உத்தமத்தின் இந்த வலை பக்கத்தில்.
சில முக்கியமான தமிழ் கணினிமயமாக்கல் முயற்சிகளை பற்றி சுட்டிகள் கொடுத்துள்ளேன். புதுசா யாராவது கணினியில் தமிழ்மயமாக்கும் முயற்சிகள் பற்றி தெரிஞ்சுக்க நினைச்சா உபயோகமா இருக்கும்னு நினைக்கறேன். தெரிஞ்சுண்டு அப்படியே அவரவர் நேரம் மற்றும் சக்திக்கு தகுந்தார்போல் இந்த முயற்சிகளுக்கு உதவி செய்தால் போற வழிக்கு புன்னியம் கிடைக்கும், இல்லையா? என்ன நான் சொல்றது?
10 comments:
goog list Yagna
-MAthy
thanks.there is a need in tamil for a site that lists the tamil software developed,
tamil software under testing, software in progress with links to respective groups,organisations and individuals.this may help in avoiding duplication.
Vanakkam Yagna, Nalla Muyarchi vaazhthukkal :)
Continue writing this , please try to maintain this in a Wiki page so that we can maintain that permanently.
-Mugunth
I second the thoughts of Ravi Srinivas & Mugunth. Keep up the good work (sorry typing from a cybercafe, so no tamil utilities)
உங்களின் முயற்சிக்கும், உதவிக்கும் பாராட்டுக்கள். முகுந்த் சொல்வதுபோல் விக்கி-போன்றவற்றிலும் இடுங்கள்.
அதுபோக, வெறும் வலைப்பதிவு போன்றே இல்லாமல் - முடிந்தால் முக்கியப்பதிவுகளுக்கு அல்லது மென்பொருளை வகைப்படுத்தி வலதுபுறம் இண்டக்ஸ் இடுங்கள். தேடுபவர்களுக்கு பயனாக இருக்கும்.
நன்றி மதி,ரவி, நாராயணன், முகுந்த் & அன்பு.
விகி யோசனை நல்லாதான் இருக்கு. செய்வதில் எனக்கு தடையில்லை. யோசித்து சொல்கிறேன்.
இணையத் தமிழில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல், தெரிந்துகொள்ள முனையாமல் இருக்கும் தமிழ் அச்சு ஊடகங்களின் வாசகர்களுக்கு இந்தப் பதிவு போய்ச் சேர வேண்டும். இன்னும் " தமிழில் கம்ப்யூடரில் எழுத முடியுமா? அதெப்படி" என்று கேட்பவர்களை சந்திக்கும்போது எங்கு போய் முட்டிக் கொள்வது என்று தோன்றும். சென்னையில் பொது இடங்களில் / சந்திகளில் பெரிய பெரிய பேனர்கள் வைத்துள்ளன சில கட்சிகள் - தினம் பயன்படுத்தும் ஆங்கில வார்த்தைகளுக்கு தமிழ் வார்த்தைகளை எழுதி. இதுபோல், தமிழில் கணினியில்/ இணையத்தில் தகவல் பரிமாற்றம் செய்து கொள்ளலாம் என்று பெரிதாக பேனர் போட வேண்டியதுதான். நாராயண் சைபர் கபேயிலிருந்து எழுதியதால் இங்கே தமிழில் எழுத முடியவில்லை. தமிழ் மென்பொருட்கள் இலவசமாக கிடைக்கிறது. சைபர் கபேக்களில் ஒரு முரசையோ அல்லது கலப்பையையோவையும் சுரதாவின் யூனிகோட் உருமாற்றியையும் இறக்கி வைத்திருந்தால் பயனர்களுக்கு சௌகரியமாக இருக்குமே. யார் காதில் இதைப் போடலாம் என்று நானும் யோசித்துப் பார்க்கிறேன்.
பயனுள்ள தொகுப்பு யக்ஞா.
அருணா, சரியா சொன்னீங்க. எனக்கும் சில யோசனைகள் இது சம்பந்தமாக இருக்கு. எல்லாம் சரியா நடந்தா வைகாசில சொல்றேன். :-)
நல்ல முயற்சி, பாராட்டுக்கள்! இது சம்மந்தமாக ஒன்றைத் துழாவிக் கொண்டிருக்கப் பின்வரும் சுட்டி கண்ணில் பட்டது: http://www.thamizham.net/thamizh.htm இதிலும் சில தொகுப்புகளுக்கான சுட்டிகள் உள்ளன. உங்கள் முயற்சிக்கு உதவுமா அல்லது உங்கள் முயற்சியுடன் ஒருங்கிணைக்க முடியுமா என்று பார்க்கவும்.
நன்றி இராதாகிருஷ்ணன். இவர் செய்வது பெரும்பணி. சில விஷயங்கள் நீங்கள் சொல்வது போல நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.
Post a Comment