நொபெல் பரிசு இயற்பியல், வேதியல், மருத்துவம், இலக்கியம் மற்றும் அமைதி ஆகிய ஐந்து துறைகளில் தான் முதலில் வழங்கப்பட்டது. ஆல்ஃப்ரட் நொபெல் (ஆல்தோட்ட பூபதி இல்லை :-) ) தன் 1985'ல் உயிலில் தனக்கு பிடித்த நான்கு அறிவியல் பிரிவுகள் மற்றும் மருத்துவம் ஆகிய ஐந்து துறைகளில் பெரும் சாதனை படைத்தவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் வழங்க எழுதிவைத்தார். நொபெல் பரிசு வாங்கியே மில்லியனெர் ஆகிவிடலாமாம், அவ்வளவு தருகிறார்களாம். (முயன்று பார்க்கலாமோ? ஒன்னேகால் மில்லியன் டாலர் என்றால் சும்மாவா?)
அப்புறம் 1965'ல் பொருளியலில் நொபெல் வழங்க ஆரம்பித்தார்கள் (இது அசல் நொபெல் இல்லை). இப்பொழுது 2001'ல் அறிவியல் பிரிவுகளில் ரானியம்மா, கணிதத்திற்கு நொபெல் போல் ஏபெல் பரிசு வழங்க ஆரம்பித்துள்ளார்கள். இந்த கணித நொபெல், அதாங்க ஏபெல் பரிசு குழுவினர் அப்துஸ் சல்மான் சர்வதேச துனிபு இயற்பியல் மையம் மற்றும் சர்வதேச கணித இணையம், இந்த வருஷம் ராமானுஜன் பரிசு என்றொரு பரிசு நிறுவியிருக்கிறார்கள். வளர்ந்து வரும், மூன்றாம் உலக நாடுகளிலிருந்து சாதனைபுரிந்த இளம் கணிதவியலாளருக்கு இது வழங்கப்படும். அம்மாடியோவ்!...
இனி கணிதமேதை ராமானுஜனுக்கு அங்கீகாரம் கிடைக்குமா/கிடைத்ததா என்ற கேள்விகள் எல்லாம் புறந்தள்ளுங்கள். இன்று ராமானுஜனின் பெயரால் மற்றவருக்கு அங்கீகாரம் வழங்கப்படுகிறது.
2 comments:
தகவலுக்கு நன்றி..இதே ராமானுஜம் பரிசு போல இன்னோரு ராமானுஜம் பரிசு இருக்கிறது.. அது சிறந்த மொழிபெயர்ப்புக்கான பரிசு... இந்த ராமானுஜம், A.K.ராமானுஜன் .
அட, இன்னாபா எப்போ புளாக்கு போட்ட? எனக்கு மேட்டரே தெரியாது, இன்னிக்குதான் பார்த்தேன்.
ஒழுங்க சண்டை போடாம எழுதணும், சொல்லிட்டேன் ஜாக்கரதை. :-))
Post a Comment